தூய பாத்திமா அன்னை பங்கு – மறைக்கல்வி ஞாயிறு
2 ஆகஸ்ட் 2026 அன்று காலை 8.30 மணிக்கு நடைபெற்ற தமிழ்த் திருப்பலியில், மறைக்கல்வி ஆசிரியர்களுக்கான திருநிலைப்படுத்தும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. தந்தை மறைத்திரு. வி. ஏ. மைக்கேல் அவர்கள் மறைக்கல்வி ஆசிரியர்களைத் திருநிலைப்படுத்தி, அவர்களின் மறைப்பணியை ஆசீர்வதித்தார்.
மறைக்கல்வி ஆசிரியர்கள் அனைவரும் இறைநம்பிக்கையுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் தங்கள் பணியைச் சிறப்பாக ஆற்றிட இறைவன் அருள்புரிவாராக!
